'முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடிய பாலாஜி: ஷிவானிக்கு மட்டும் கேக் ஊட்டாதது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடிய நிலையில் காதலன் அல்லது காதலி இல்லாதவர்கள் முரட்டு சிங்கிள்ஸ் டே’ கொண்டாடி காதலர்களுக்கு வெறுப்பேற்றினர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கிள்ஸ்கள் இணைந்து முரட்டு சிங்கிள் டே கொண்டாடி கேக் வெட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள பிக்பாஸ் 4 ரன்னர் பாலாஜி, ‘ஹாப்பி முரட்டு சிங்கிள்ஸ் டே’ கூறிய கேக் வெட்டினார். பின்னர் அந்த கேக்கை எடுத்து அவர் ஆஜித், சனம், ரம்யா பாண்டியன் ஆகியோர்களுக்கு ஊட்டி விட்டு அருகிலிருந்த ஷிவானிக்கு மட்டும் கேக்கை ஊட்டாமல், ‘இதற்குமேல் போனால் பிரச்சினை ஆயிரும் என்று கூறினார்.
பாலாஜி கூறியதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு ரம்யா பாண்டியன் விழுந்து விழுந்து சிரித்தது ஷிவானிக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பிக்பாஸ் சக போட்டியாளர்களும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பாலாஜி மற்றும் ஷிவானி நெருக்கமாக இருந்ததும், அதன்பின்னர் ஷிவானி அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஷிவானிக்கு டோஸ் விட்டதும், பாலாஜியிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் இருந்ததும் தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com