காதல் வந்துருச்சு: ஜோடி சேரும் கேப்ரில்லா-பாலாஜி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி கடைசிவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின்-லாஸ்லியா ஜோடிகள் கடைசிவரை நிகழ்ச்சியை பரபரப்பாக கொண்டு சென்றனர்.
அந்த வகையில் இந்த சீசனின் காதல் ஜோடி யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் விவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி ரொமான்ஸ் செய்வதையும் பின்னணியில் ‘யாரோ யாருக்கு இங்கு யாரோ’ என்ற பாடல் ஒலிப்பதையும் பார்க்கும் போது இருவருக்கும் இடையில் விரைவில் காதல் பத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கேப்ரில்லாவை கிண்டலுடன் பாலாஜி பேசுவதும் அவரை செல்லமாக அடிக்க கேப்ரில்லா கையை ஓங்குவதுமான காட்சிகளை பார்க்கும்போது விரைவில் ஒரு காதல் ஜோடி உருவாகும் என்றே தோன்றுகிறது. ஒருவேளை தங்களுக்கு கிடைத்த ‘காணவில்லை’ மற்றும் ‘நமத்து போன பட்டாசு’ விருதின் கறையை போக்க இந்த ரொமான்ஸ் நாடகமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் இந்த சீசனில் ஆஜித்-கேப்ரில்லா காதல் ஜோடிக்கு வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த நிலையில் பாலாஜி-கேப்ரில்லா ரொமான்ஸ் காட்சிகளை ஆஜித் பரிதாபமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day12 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/aMes21OUGG
— Vijay Television (@vijaytelevision) October 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments