திரைப்பட விழாவுக்கு வரும்போது சரக்கடித்தாரா பாலையா? அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் பாலையா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் சரக்கடித்ததாகவும் மது போதையில் அவர் நடிகை அஞ்சலியை தள்ளி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலையா என்பதும், அவரது படங்கள் சமீப காலமாக சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அஞ்சலி நடித்த ’கேம்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படத்தின் ப்ரமோஷன் விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த போது அதில் சிறப்பு விருந்தினராக பாலையா கலந்து கொண்டார்.
அவர் மேடையில் வந்ததும் நடிகை அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்ட காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன் பின்னர் பாலையா ஒரு ஜோக் அடிக்க, அஞ்சலியும் அருகில் இருந்த இன்னொரு நாயகியான நேஹாவும் சிரித்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
இந்த நிலையில் இந்த விழாவில் பாலையா உட்காந்திருந்த நாற்காலியின் அருகில் சரக்கு போன்ற ஒரு பொருள் பாட்டிலில் இருப்பதையும் அதன் அருகில் தண்ணீர் பாட்டில் இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து மேடையிலேயே பாலையா சரக்கடித்தாரா? மது போதையில் தான் அஞ்சலியை தள்ளி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பாலையா மது போதையில் இல்லை என்றும் இந்த நிகழ்ச்சியின் போது அவர் மது அருந்தவும் இல்லை என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
🤦♂️🤦♂️🤦♂️
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 30, 2024
pic.twitter.com/gbWHos6gpm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com