close
Choose your channels

எனக்கு சாக்லேட், இனிப்புகள் பரிசாக கிடைத்தது: பாலாவின் 4வது திருமணம் குறித்து 3வது மனைவி..!

Saturday, October 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் பாலா சமீபத்தில் தனது உறவினர் பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகள் பரிசாக கிடைத்ததாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், அவர் கூறிய போது ’நான் சில விஷயங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்; ஆனால் இந்த நேரத்தில் இந்த வீடியோவை வெளியிடுவது சரியாக இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதைப் பற்றி இப்போது விவாதம் செய்ய விரும்பவில்லை, ஆனால் அதே சமயம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

நான் தற்போது அகமதாபாத்தில் உள்ள ஒரு நோயாளியின் வாழ்க்கைக்கு சிகிச்சை அளித்து, தக்க சமயத்தில் அவரை காப்பாற்றினேன். இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் நிறைய சாக்லேட் மற்றும் இனிப்புகளை பரிசாக கொடுத்தார்கள். நான் செய்தது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும், அவர்கள் கொடுத்த அன்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சில விஷயங்களால் வருத்தமாக இருந்தாலும், தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று, பாலாவின் நான்காவது திருமணம் குறித்து மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment