போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்: பாலா பாராட்டிய படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தை பார்த்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இந்த படத்தில் நடித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியது ’கொட்டுக்காளி’ படத்தின் குழுவினர்களை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று. இந்தக் கொட்டுக்காளி.
ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார், இயக்குனர் வினோத் ராஜ். குறிப்பாக, சூரி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென், படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் தான் என்று சவால் விட்டிருக்கிறார்கள்.
காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்.
இயக்குனர் அண்ணன் பாலாவின் வாழ்த்து! எங்களுக்கு இதுவரை கிடைத்த மிகச்சிறந்த விருதுகளில் இதுவும் ஒன்று!#Kottukkaali#KottukkaaliFromToday@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj @AnnaBenofficial @SKProdOffl @sakthidreamer @thecutsmaker @valentino_suren… pic.twitter.com/XdOficrrBR
— Actor Soori (@sooriofficial) August 23, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments