'கத்தி', 'எந்திரன் 2' படங்களுடன் கனெக்ஷன் ஆன 'தாரை தப்பட்டை?

  • IndiaGlitz, [Tuesday,September 15 2015]

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தின் உருவாகியுள்ள 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிறுவனம் தான் விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்தது என்பதும், சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான 'எந்திரன் 2' படத்தை தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கரகாட்ட கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் சதீஷ் கெளசிக், அமுதவாணன், காவ்யா ஷா, 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி குருபிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செழியன் ஒலிப்பதிவும், சமீபத்தில் மறைந்த கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். பாலாவின் 'பி' ஸ்டுடியோ இந்த் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக நாயகன் சசிகுமாருக்கு காயம் ஏற்பட்டதால் இடையில் சிலகாலம் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. சசிகுமார் உடல்நலம் தேறி வந்தவுடன் மீண்டும் இந்த படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More News

அறிமுக தயாரிப்பாளருக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த ஜெயராமன், கோலிவுட்டில் 'ரஜினி ஜெயராமன்' என்றே அழைக்கப்படுகிறார்...

திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். மிஷ்கின்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பி.வாசு. இவருடைய மகன் சக்தி நடித்த தற்காப்பு...

சென்னை மருத்துவமனையில் நடிகர் நாசர்?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் ...

உண்மை இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். சிம்பு ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் விஷால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

வாடகை வீட்டில் கஷ்டப்படும் நடிகர் கிஷோர்

கோலிவுட் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர், நாயகனாக நடித்து வரும் படம் 'கடிகார மனிதர்கள்'...