பாலா-சற்குணம்-அதர்வா இணைந்த 'சண்டிவீரன்'. ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சண்டிவீரன். இரு தேசிய விருது பெற்ற கலைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளதால், நிச்சயம் இந்த படம் ஒரு தரமான படமாக இருக்கலாம் என உறுதியாக நம்பலாம்.
சமீபத்தில் பாலா தயாரித்த 'பிசாசு' படத்தை இயக்கிய மிஷ்கின் தனக்கு பாலா முழு சுதந்திரம் கொடுத்ததாக கூறியிருந்தார். கண்டிப்பாக அதேபோன்ற ஒரு சுதந்திரத்தை பாலா, இயக்குனர் சற்குணம் அவர்களுக்கும் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
சற்குணம் இதற்கு முன்பு இயக்கிய 'நையாண்டி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவர் இயக்கிய கிராமத்து கதையம்சம் உள்ள படங்களான களவாணி மற்றும் வாகை சூட வா' திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களையும் நல்ல வசூலையும் கொடுத்தன. எனவே மீண்டும் ஒரு கிராமத்து பின்னணி திரைப்படத்தை இயக்கியுள்ள சற்குணம், இந்த படத்தையும் ஹிட் படமாக கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமத்து இளைஞராக இந்த படத்தில் நடித்திருக்கும் அதர்வா, இந்த படத்தின் கேரக்டருக்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடல்வாகை முற்றிலும் மாற்றியுள்ளார். பாணா காத்தாடி, பரதேசி என வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்து வரும் அதர்வாவுக்கு இந்த படம் ஒரு முன்னேற்ற படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கயல்' என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை குடிகொண்ட ஆனந்தி மீண்டும் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த ஒரு காட்சியையும் கட் செய்யாமல் அப்படியே அனுமதித்து படத்திற்கு 'யூ' சர்டிபிகேட்டும் கொடுத்துள்ளது இந்த படத்தின் மீதான மதிப்பை உயர்த்துகிறது.
இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த 'சண்டிவீரன்' நாளை ரிலீஸாகவுள்ளது. பாலா, சற்குணம், அதர்வா, ஆனந்தி என முழு திறமையானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இணைந்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ததா? என்பதை நாளைய விமர்சனத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments