காதலர் தினத்தில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி கொடுத்த பால சரவணன்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் பாலசரவணன் நேற்று காதலர் தினத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு வாங்கி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சசிகுமார் நடித்த ’குட்டிப்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் பால சரவணன். அதன் பின்னர் அவர் பண்ணையாரும் பத்மினியும், என்றென்றும், வேதாளம், கூட்டத்தில் ஒருவன், உள்குத்து, ஏமாளி, இருட்டு அறையில் முரட்டு குத்து, டான் உள்பட பாலா திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்திலும் பிரஸ் ரிப்போர்ட்டர் ஆக நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதை கவர்ந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி நடிகர் பால சரவணன் அளித்துள்ளார். இது குறித்து அவரது மனைவி ஹேமா தனது இன்ஸ்டாகிராமில் கூறிய போது, ‘வாழ்க்கை என்பது நாம் கற்பனை செய்து பார்ப்பதை விட மிகவும் அழகானது. என்னுடைய கணவர் எனக்காக புதிய ஹூண்டாய் கார் வாங்கி பரிசளித்து உள்ளார், அவருக்கு எனது நன்றி’ என தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் காரில் செல்லும் வீடியோவையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Life has more surprises than we imagine…My new bestie #Hyundaicreta2023 Thx for this precious gift my love 🧡 my 🌍
— HemaBala (@SaheHema) February 14, 2023
Happy Valentine’s Day 🧡 @Bala_actor pic.twitter.com/O8qulEXc9O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com