சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி: 'டான்' படப்பிடிப்பின் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பின் இடையே எடுத்த புகைப்படங்களை பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா மோகன், சூரி, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்பட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து வரும் பாலசரவணன் படப்பிடிப்பின் இடையே சிவகார்த்திகேயன், ஷிவாங்கி பிரியங்கா மோகன், ஆர்ஜே விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா புரடொக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.