விக்ரம் மகனின் 'வர்மா' படப்பிடிப்பு குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'வர்மா' படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிததே. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நேபாளத்தில் தொடங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக நிறுத்தப்பட்டது.

தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் பாலா தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது துருவ் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த காட்சியை பாலா படமாக்கி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜூ முருகன் வசனம் எழுதும் இந்த படத்தில் துருவ் ஜோடியாக கவுதமி மகள் நடிக்கவுள்ளதாக வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த தகவலை மறுத்த படக்குழுவினர் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். பாலாவின் முதல் ரீமேக் படமான இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது