பாலாவின் 'சேது' பட நாயகி அபிதாவை ஞாபகம் இருக்குதா? குழந்தைகளுடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘சேது’ என்பதும் சியான் விக்ரம் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றது.

இந்த படம் விக்ரம், பாலா ஆகிய இருவருக்கும் ஒரு திருப்புமுனை படமாக அமைந்த போதிலும் இந்த படத்தில் நாயகியாக நடித்த அபிதாவுக்கு இந்த படத்திற்கு பின் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அபிதா சின்னத்திரையில் நுழைந்து பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பாக அவர் நடித்த ’திருமதி செல்வம்’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்துகொண்ட அபிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு அவர் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் உள்ள தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நடிகை அபிதா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். ‘மாரி’ என்ற டைட்டில் கொண்ட அந்த சீரியலில் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தெய்வயானை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மீண்டும் சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.