தொடர்ந்து உதவி செய்வதால் பாலா பர்சனல் வாழ்க்கையில் சிக்கலா? பயனளிக்காத பேச்சுவார்த்தை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து சமூக சேவை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த உதவிகளே அவருடைய பர்சனல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டிவி பாலா அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்பதும் மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, தையல் மெஷின், ஏழை எளியவர்களின் திருமண செலவு, இளைஞர்களுக்கு பைக் மற்றும் சிறுவனின் கண் ஆபரேஷனுக்கு பணம் என அவர் செய்த உதவியை குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு பக்கம் பாலாவின் உதவி குறித்து சிலர் விமர்சனம் செய்து வந்தாலும் பலர் அவரது சேவையை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாலா ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் திடீரென தற்போது பெண் கொடுக்க தயக்கம் காட்டுவதாகவும் பாலா உதவி செய்து கொண்டே இருந்தால் அவருடைய எதிர்காலம் மற்றும் தனது மகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பெண் வீட்டார் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலாவிற்கு நெருக்கமானவர்கள் பெண்ணின் வீட்டாரிடம் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பெண் வீட்டார் சமாதானம் ஆகவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி பாலாவின் திரைப்பட வாய்ப்புகளிலும் அவர் செய்த உதவிகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்கள் சிலர் தங்களுடைய படத்தில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் பாலாவுக்கு வெளியில் நல்ல பெயர் இருப்பதால் தன்னைவிட அவர் பெயர் தான் பெரிதாக பேசப்படும் என்று தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com