மீண்டும் இணையும் பாலா-மிஷ்கின்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

பாலாவின் தயாரிப்பில் உருவான ’பிசாசு’ என்ற திரைப்படத்தை மிஷ்கின் இயக்கிய நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. அந்த நட்பின் அடிப்படையில் தான் பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பிசாசு’ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கினார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய் மற்றும் ரோஷினி பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் மிஷ்கின் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய்யின் ‘லியோ’ உள்பட பல படங்களில் மிஷ்கின் தற்போது நடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில் ’வணங்கான்’ படத்திலும் இணைந்துள்ளார்.

More News

ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் எதிரொலி.. மலையாள 'ஜெயிலர்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின்  முதல் நாள் காட்சியின் முன்பதிவுகள்

இந்திய ராணுவத்துடன் ரூ.165 கோடியில் ஒப்பந்தம்.. அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!

நடிகர் அஜித் நடிகராக மட்டுமின்றி  பைக் ஓட்டுநர், கார் ஓட்டுநர், உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிறந்த சமையல் செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் ட்ரோன் தயாரிப்பிலும்

'விவாகரத்து இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கை.. தீபிகா படுகோனே கொடுத்த டிப்ஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக

'என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை'.. ஜிவி பிரகாஷின் 'அடியே' டிரைலர்..!

ஜிவி பிரகாஷ் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான 'அடியே' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ' இரண்டாம் பாகம் உருவாகிறதா? 2ஆம் பாகத்தின் டீசர் ரிலீஸ் தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கூறப்படுவது