ஒவ்வொருத்தருக்கும் நியாயம் தர்மன்னு ஒன்னு இருக்கும்: பாலாவின் 'வணங்கான்' டிரைலர்..

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகள் அவரது முந்தைய படத்தில் உள்ள காட்சிகளை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது. குறிப்பாக அருண் விஜய்யின் கேரக்டர் ‘பிதாமகன்’ விக்ரம் கேரக்டர் போல் உள்ளது என்பதும் பல காட்சிகள் அவருடைய ஸ்டைலில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. .குறிப்பாக அதீத வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஏன்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதே நேரத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டவர்களிடம் பாலா நன்றாக வேலை வாங்கி உள்ளார் என்பது ஒவ்வொரு ஷாட்டில் இருந்து தெரிகிறது. நீதிபதி கேரக்டரில் நடித்துள்ள மிஷ்கின் நடிப்பு அபாரமாக உள்ளது. சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக உள்ளனர்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அசத்த வைக்கும் வகையில் உள்ளது என்பதும் குருதேவ் கேமரா மிரள வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பாலாவின் ஸ்டைலில் இன்னொரு திரைப்படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இருந்து யூகிக்க முடியவில்லை என்றாலும் நிச்சயம் ஒரு வித்தியாசமான கதையை தான் அவர் சொல்லி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

💰வீட்டில் பணம், செல்வம்,அதிர்ஷ்டம் வந்து சேர எளிய முறைகள்.!

பிரபல ALP ஜோதிடர் ஶ்ரீகுரு. பத்மா மகாலிங்கம் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற,

வயது 31 தான்.. அதற்குள் 13வது திருமண நாளை கொண்டாடும் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

30 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் இருக்கும் திரை உலகில் 31 வயதில் 13வது திருமண நாளை கொண்டாடிய நடிகை, அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள

'புஷ்பா' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மீண்டும் விலைமாது கேரக்டரில் அஞ்சலி..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அஞ்சலி மீண்டும் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள்.. நடிகை அன்னாபென் பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை அன்னாபென்

நடிப்பு பயிற்சியாளர் ஆகிறார் தமிழ் சீனியர் நடிகர்.. அதிலும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கா?

கோலிவுட் திரை உலகை சேர்ந்த சீனியர் நடிகர் நடிப்பு பயிற்சியாளராகிறார் என்றும் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில்