சூர்யாவுக்கு 32 நாட்கள், அருண் விஜய்க்கு 20 நாட்கள்.. பாலாவின் 'வணங்கான்' அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகிய நிலையில் அந்த திரைப்படம் பாதியில் நின்று போனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் தற்போது நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அதே டைட்டிலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை 20 நாட்களில் பாலா முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காட்சிகளை அவர் சூர்யாவை வைத்து படமாக்கிய போது 32 நாட்கள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்த ‘வணங்கான்’ படத்தை அவருடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போதைய ‘வணங்கான்’ படம் பாலாவின் சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வணங்கான்’ அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடத்த பாலா திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பாலா நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாக்கி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.