பாலாவின் 'வணங்கான்' சென்சார் சான்றிதழ் விவரங்கள்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,August 17 2024]

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படம் ஆரம்பத்தில் சூர்யா நடிப்பில் உருவான நிலையில் அதன் பின் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதால், அருண் விஜய் இணைந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களாக டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். பாலாவின் ’தாரை தப்பட்டை’ மட்டுமே ‘ஏ’ சான்றிதழ் கிடைத்த நிலையில் மற்ற படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது போல் ’வணங்கான்’ படமும் ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் ’வணங்கான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

More News

சிம்பு 48 .. ராஜமௌலி-சஞ்சய் லீலா பன்சாலி இணைந்த படம் போல் இருக்கும்: பிரபலம் கூறிய தகவல்..!

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கும் நிலையில் இந்த படம் ராஜமெளலி  மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து எடுத்தால்

'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால்.. வெற்றி விழாவில் விக்ரம் பேச்சு..!

'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்காக இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று

7வது இடத்திற்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'.. டிஆர்பியில் டாப் 6 இடங்களில் சன் டிவி தொடர்.!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல்கள் குறித்த டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த

'கனா காணும் காலங்கள்' சீசன் 3.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமாகும் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான  "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது

என் வாழ்க்கையை மாற்றிய முருகன்! - Singer Velmurugan

பிரபல பாடகர் வேல்முருகன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தனது ஆழ்ந்த ஆன்மீக வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.