பாலாவின் 'வணங்கான்' சென்சார் சான்றிதழ் விவரங்கள்.. ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படம் ஆரம்பத்தில் சூர்யா நடிப்பில் உருவான நிலையில் அதன் பின் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதால், அருண் விஜய் இணைந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களாக டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். பாலாவின் ’தாரை தப்பட்டை’ மட்டுமே ‘ஏ’ சான்றிதழ் கிடைத்த நிலையில் மற்ற படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது போல் ’வணங்கான்’ படமும் ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் ’வணங்கான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Get Ready for the ultimate Experience! @IyakkunarBala 's #Vanangaan certified with
— sureshkamatchi (@sureshkamatchi) August 17, 2024
U/A . Releasing date wl b announced soon. 🙏@arunvijayno1 @roshiniprakash_ @iam_ridhaa@thondankani@DirectorMysskin@gvprakash @SamCSmusic@editorsuriya@rk_naguraj @silvastunt… pic.twitter.com/KfvnvTF9Na
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com