ரூ.2 லட்சம் மட்டுமல்ல.. மீண்டும் லட்சக்கணக்கில் உதவி செய்த பாலா.. குவியும் பாராட்டுக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி பிரபலம் பாலா சமீபத்தில் தனது அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாயை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது மீண்டும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வெள்ளம் பாதித்த பகுதியினருக்கு நேரடியாக சென்று வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே தனது அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாயை 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்த பாலா, தனது அவசர தேவைக்காக சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்ச ரூபாயை எடுத்து தற்போது மீண்டும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்
120 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ வீதம் 600 கிலோ அரிசி அளித்ததாகவும், அதே போல் பெண்களுக்கு நைட்டி ஆண்களுக்கு கைலி என வெள்ள நிவாரணம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் என 140 குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அதே போல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள நைட்டி கைலி ஆகியவை வாங்கி வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு லட்சம் வழங்கிய பாலா தற்போது மேலும் 3 லட்சத்தை மக்களுக்கு செலவு செய்துள்ளார்.
அரசிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் நிவாரண நிதியாக அரசிடம் வழங்கும் நடிகர்கள் மத்தியில் தன்னிடம் இருக்கும் பணத்தை நேரடியாக சென்று மக்களுக்கு கொடுத்த பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அந்த மனசு தான் சார் கடவுள்
— Rajini (@rajini198080) December 7, 2023
KPY Bala pic.twitter.com/748A05jnqr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com