சிம்பு படத்தில் நடித்ததாக கூறிய பாலா: சிம்புவின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேற்று முதல் சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாலா தன்னுடைய படத்தில் நடித்ததாக கூறியதற்கு சிம்பு கூறிய பதில் காமெடியாகவும் கலக்கலாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் .

சிம்பு நேற்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அந்த வகையில் பாலாவுடன் அவர் பேசியபோது ’நீங்கள் நடித்த படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறேன்’ என பாலா கூறினார்.

இதை சிம்பு மட்டுமின்றி ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. சிம்பு நடித்த ’வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் குழந்தை நட்சத்திரமாக பாலா குரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடியதாக கூறினார்.

அப்போது சிம்பு ’என்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் என்று சொல்லி என்னுடைய வயது அதிகம் என்று நினைக்க வைத்து விடாதீர்கள்’ என சிம்பு கூறியது காமெடியாகவும் கலக்க வைப்பதாகவும் இருந்தது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

More News

உக்ரைனில் சிக்கி கொண்டாரா தமிழ் நடிகை? அவரே அளித்த விளக்கம்!

உக்ரைன் நாட்டில் தமிழ் நடிகை ஒருவர் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து அந்த நடிகை இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். 

நடிகையின் பாவாடையை கடிக்க முயன்று, முடியாமல் தோற்று போன சல்மான்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ’பீஸ்ட்’ நாயகி நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினி, விஜய் படங்களை அடுத்து தனுஷ் படத்திற்கு கிடைத்த பெருமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை அடுத்து தனுஷ் திரைப்படத்திற்கு கிடைத்த பெருமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜயகாந்தா இவர்? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றது யார்?

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று இரவு வெற்றி பெற்றது யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.