விஜய் சகோதரருக்காக இணைந்த 6 திரையுலக பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் சகோதரரும் நடிகருமான விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பக்ரீத்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் நேற்றே அறிவித்திருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த டீசரை தமிழ் திரையுலகின் 6 பிரபலங்கள் இணைந்து வெளியிடவுள்ளனர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், ஆர்யா ஆகிய ஆறுபேர் இணைந்து இன்று மாலை 5 மணிக்கு 'பக்ரீத்' பட டீசரை வெளியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பக்ரீத்' படத்தை ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார். டி.இமான் இசையில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்10 புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com