இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? மண்ணும் பெண்ணும் ஒன்றா? ஐட்டம் சாங் எதற்கு? காரசாரமான கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ’பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலமையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வன்னியர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? பெண்களை மண்ணுடன் ஒப்பிடலாமா? பெண்களின் புனிதம் குறித்து கூறும் இந்த படத்தில் ஐட்டம் சாங் எதற்கு? போன்ற காரசாரமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் கத்தி அரிவாளுடன் திரிந்து கொண்டிருந்த இளைஞர்களிடம் மிகவும் கஷ்டப்பட்டு நாம் பெரியோர்கள் புத்தகத்தை கொடுத்து இருக்கிறார்கள், இப்போது மீண்டும் கத்தியை கொடுக்கும் படங்கள் வரலாமா? என்ற கேள்விக்கு வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ படத்திலிருந்து ’அசுரன்’ படம் வரை கத்தி, அரிவால் தான் உள்ளது, அவரிடம் யாரும் இது போன்ற கேள்வி ஏன் கேட்கவில்லை என்று மோகன்ஜி பதில் அளித்தார்.
மேலும் மோகன் ஜி படம் என்றாலே பிற்போக்குத்தனமான படம் என்றுதான் அனைவரும் கூறுகின்றார்கள் என்றும் இந்த விமர்சனம் எதிர்பார்த்ததுதான் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments