'பகாசூரன்' வெற்றிக்காக தானே களமிறங்கிய இயக்குனர் மோகன் ஜி: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

’பகாசூரன்’ வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தானே களம் இறங்கி போஸ்டர் ஒட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

சமீபத்தில் வெளியான ’பகாசூரன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் அதனால் வசூலும் திருப்திகரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் அனைத்து மக்களையும் போய் சேர வேண்டும் என்று தான் விருப்பப்படுவதாகவும் இந்த படத்தில் உள்ள செய்தி கண்டிப்பாக மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யும் என்றும் ’பகாசூரன்’ இயக்குனர் மோகன் ஜி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’பகாசூரன்’ திரைப்படத்தின் வெற்றிக்காக அவரே களமிறங்கி நள்ளிரவில் தெருக்களில் உள்ள சுவர்களில் போஸ்டர் ஒட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு இயக்குனர் அவரே போஸ்டர் ஒட்டியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.