பஜாஜின் புதிய BS6 பைக்குகள்.. விலை என்ன தெரியுமா..?
- IndiaGlitz, [Friday,February 14 2020]
ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் வாகனத் தயாரிப்பாளர்கள், ஒருபுறம் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்றால், பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுக்க BS-6 எரிபொருள் சிக்கலின்றி கிடைப்பதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்கள்.
டூ-வீலர்களைப் பொறுத்தவரை ஹோண்டா, ஹீரோ, டிவிஎஸ், சுஸூகி, பியாஜியோ - ஏப்ரிலியா, யமஹா, ராயல் என்ஃபீல்டு, ஜாவா எனப் போட்டி நிறுவனங்கள் வரிசையாக தமது BS-6 மாடல்களை இறக்கிக்கொண்டிருக்கும் சூழலில், பஜாஜ் கொஞ்சம் அமைதி காத்தே வந்தது. CT 100 மற்றும் பிளாட்டினாவின் BS-6 வெர்ஷன்களுக்குப் பிறகு, 18 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் பல்ஸர் பிராண்ட் மற்றும் பெருமைமிகு அவென்ஜர் பிராண்டின் மாடல்களை BS-6 விதிகளுக்கு பஜாஜ் அப்டேட் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இதில் எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இடம்பிடித்திருப்பதுடன், எக்ஸாஸ்ட் அமைப்பிலும் கணிசமான மாறுதல் இருக்கிறது.
மற்றபடி வசதிகள், அளவுகள், மெக்கானிக்கலாக நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் பஜாஜிடமிருந்து வரவில்லை. இதில் சில மாடல்களின் பவர் விவரங்கள் வெளிவந்துள்ளன. டாப் செல்லிங் பல்ஸரான 150 சீரிஸ் 14bhp@8,500rpm பவர் - 1.32kgm@6,500rpm டார்க்கைத் தருகிறது. பல்ஸர் 180 Neon HF, முன்பைப் போலவே 17bhp@8,500rpm பவரை வெளிப்படுத்துகிறது. கார்புரேட்டருக்குப் பதிலாக Fi வந்துவிட்டதால், BS-6 RS200-க்குச் சமமாக NS200-ம் 24.5bhp@9,750rpm பவரைக் கொண்டுள்ளது. பஜாஜின் புதிய BS-6 மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு,
பல்ஸர் 125 Neon (Drum/Disc) - 68,762 ரூபாய்/73,088 ரூபாய் (முன்பைவிட 5,178/6,502 ரூபாய் அதிகம்)
பல்ஸர் 150 Neon - 85,920 ரூபாய் (முன்பைவிட 10,000 ரூபாய் அதிகம்)
பல்ஸர் 150 Standard - 92,429 ரூபாய் (முன்பைவிட 12,000 ரூபாய் அதிகம்)
பல்ஸர் 150 Twin Disc - 96,563 ரூபாய் (முன்பைவிட 12,000 ரூபாய் அதிகம்)
பல்ஸர் 180 Neon HF - 1.07 லட்ச ரூபாய் (முன்பைவிட 11,437 ரூபாய் அதிகம்)
பல்ஸர் 220F - 1,16,263 ரூபாய் (முன்பைவிட 8,000 ரூபாய் அதிகம்)
பல்ஸர் NS200 - 1.24 லட்ச ரூபாய் (முன்பைவிட 10,000 ரூபாய் அதிகம்)
பல்ஸர் RS200 - 1.43 லட்ச ரூபாய் (முன்பைவிட 3,000 ரூபாய் அதிகம்)
அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் - 89,536 ரூபாய் (முன்பைவிட 7,501 ரூபாய் அதிகம்)
அவென்ஜர் 220 ஸ்ட்ரீட்/க்ரூஸ் - 1.15 லட்ச ரூபாய் (முன்பைவிட 11,584 ரூபாய் அதிகம்)