இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
2017ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு புத்தாண்டு விருந்தாக வெளிவந்துள்ளது இளளயதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர்
ஏற்கனவே இந்த படத்தின் டீசரும், பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள டிரைலரும் மாஸ் ஆக இருப்பதால் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கா மாஸ் ஆக்சன் படத்தில் இருக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் இந்த டிரைலரில் இருப்பதால் நிச்சயம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு பெருவிருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
முதல் காட்சியிலேயே ஆக்சன் காட்சிகளும், கைவிரல்களில் நாணயத்தை வைத்து விளையாடும் காட்சிகளும் தெறிக்க வைக்கின்றது. 'ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன்' என்று விஜய் பாடி லாங்வேஜ்வுடன் கூறும் அழகு, பஞ்ச பூதங்களே நம்ம ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்குதுன்னு நம்புது.. போன்ற காதல் வசனமும், நேர்மையான ஆளுங்க எல்லாம் தற்கொலை பண்ணி சாகறதும், அதற்கு காரணமான காலிப் பயலுகள் எல்லாம் சந்தோஷமா திரியறதும் இப்பல்லாம் சகஜமாகி போச்சுல்ல, இன்னிக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்குது....சொன்ன வார்த்தையை காப்பாத்துறது' போன்ற அதிரடி வசனங்களும் டிரைலரை மாஸ் ஆக்குகின்றது. மேலும் டிரைலர் முழுவதுமே 'வரல்லாம் வரல்லாம் வா' பாடலின் பின்னணியில் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு
கீர்த்தி சுரேஷின் கொள்ளை அழகு, சுவிட்சர்லாந்து, திருவிழா பாடல்களின் பிரமிப்பு, ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, மைம்கோபி ஆகிய வில்லன்கள் ஆகியவைகள் டிரைலரில் இருக்கும் கூடுதல் சிறப்பு அம்சங்கள்
மேலும் சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான பின்னணி இசை படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அனல் அரசுவின் ஆக்சன், சுகுமாரின் கேமிரா, ப்ரவீண் எடிட்டிங் ஆகியவற்றுடன் இணைந்து பரதன் கொடுத்திருக்கும் இந்த ஆக்சன் விருந்து நிச்சயம் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்பது உறுதி. விஜய்க்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றிப்படமாகவும், பரதனுக்கு ஒரு நல்ல ரீஎண்ட்ரி படமாகவும் இருக்கும் என்பதை பொங்கல் திருநாள் நிச்சயம் நிரூபணம் செய்யும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com