தென்னிந்திய திரையுலகில் சாதனை படைத்தது 'பைரவா'

  • IndiaGlitz, [Monday,January 02 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டிரைலர் புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்த டிரைலர் யூடியூப் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய திரையுலக சாதனையை செய்துள்ளது.

மேலும் 'பைரவா' டிரைலருக்கு 24 மணி நேரத்தில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த டிரைலர் 35 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும், 18 மணி நேரத்தில் 2.8 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது தெரிந்ததே. விரைவில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ள 'பைரவா' திரைப்படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், ஜெகபதிபாபு, சதீஷ், அபர்ணா விநோத், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கியுள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.