விஜய் ஏன் எல்லோரையும் விட உயர்ந்தவர். கீர்த்திசுரேஷ்
Friday, October 7, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் அவருக்கு முதன்முதலாக ஜோடியாக நடித்து வரும் கீர்த்திசுரேஷ் படப்பிடிப்பின்போது விஜய்யுடனான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'பைரவா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு அதிர்ஷ்டம் என்று கூறிய கீர்த்திசுரேஷ், இந்த படம் விஜய்யின் இன்னொரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். விஜய் செட்டில் அதிகம் பேசமாட்டார். ஆனால் அதே நேரத்தில் செட்டில் உள்ள அனைவரையும் ஊக்குவிப்பதில் அவரை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது.
அவருடன் நடிக்கும்போது எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை. ஆனால் டான்ஸ் என்று வந்துவிட்டால் அவருடைய பெர்பான்ஸ் அபாரமாக இருக்கும். அவருடைய டான்ஸ் திறமைதான் அவர் எல்லோரையும் விட உயரத்தில் உள்ளார் என்பதை நிரூபித்து வருகிறது.
மேலும் கிளாமராக நடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கிளாமர் எனக்கு பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பைரவா' படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் இன்னும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் ஒருசில பெரிய படங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் ஆகும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments