'பைரவா' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு சட்டரீதியான நோட்டீஸ்
- IndiaGlitz, [Wednesday,January 11 2017]
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக மிகக்குறைந்த திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் 'பைரவா' படத்தின் கேரள உரிமையை பெற்றுள்ள IFAR இண்டர்நேஷனல் மற்றும் சாயூஜம் சினி ரிலீஸ் நிறுவனங்கள் திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி 'பைரவா' படத்தை திரையிடாவிட்டால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை 'பைரவா' படத்தை ஒப்பந்தப்படி திரையரங்குகள் திரையிடாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடர நேரிடும் என்றும் IFAR இண்டர்நேஷனல் மற்றும் சாயூஜம் சினி ரிலீஸ் நிறுவனங்கள் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளன.
இந்த சட்டரீதியிலான எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் அனைத்து திரையரங்குகளிலும் 'பைரவா' ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.