இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]



இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி பொங்கல் திருவிழா படமாக சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்தபோதிலும் ஓப்பனிங் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக சென்னை வசூல் 'தெறி' படத்தை அடுத்து மிக அதிகமாக வசூல் செய்த விஜய் படங்களில் இரண்டாவது பெரிய ஓப்பனிங் வசூல் என்ற பெருமையை பெற்றது.

இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 23 திரையரங்க வளாகங்களில் 560 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,45,51,820 கோடி வசூல் செய்துள்ளது., திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.3,38,73,610 ஆகும். இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

படப்பிடிப்பில் எல்லை மீறுவது வருந்ததக்கது. நடிகர் சங்கம் அறிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோலிவுட் திரையுலகில் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

த்ரிஷாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு

இந்நிலையில் த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களை சிலர் பதிவு செய்து வருவதாகவும், அந்த டுவீட்டுக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பதமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்...

டுவிட்டரில் ஆவேசம் அடைந்த த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பினர் சிலர் சமீபத்தில் த்ரிஷா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் செய்ததோடு அவரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்...

படப்பிடிப்பில் ப்ரியங்கா சோப்ரா காயம். மருத்துவமனையில் அனுமதி

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படம் உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நாயகியான பிரியங்கா சோப்ரா நேற்று தொலைக்காட்சி தொடரான Quantico என்ற தொடரில் நடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது...

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தடை என்ற ஒரு விஷயம் மட்டுமே உறுத்தலாக இருந்தாலும் இன்று காலை அனைத்து தமிழர்களும் வீட்டில் பொங்கல் வைத்து புதிய ஆடைகள் உடுத்தி கொண்டாடி வருகின்றனர்...