பாதியாக குறைந்தது பொங்கல் படங்கள்

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சுமார் எட்டு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளையதளபதி விஜய்யின் 'பைரவா', ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ', கலையரசனின் 'அதே கண்கள்', அருண்விஜய்யின் 'குற்றம் 23', கிருஷ்ணாவின் 'யாக்கை', ஜெய் நடித்த 'எனக்கு வாய்த்த அடிமைகள்', விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டன.

ஆனால் பொங்கல் தினம் நெருங்க நெருங்க ஒவ்வொரு படமாக விலகி தற்போது நான்கு படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை 'பைரவா', 'புரூஸ்லீ, புரியாத புதிர்', மற்றும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள்.

இவற்றில் 'பைரவா' ஜனவரி 12ஆம் தேதியும், புரூஸ்லீ, புரியாத புதிர் ஆகிய படங்கள் ஜனவரி 13ஆம் தேதியும், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.

மேலும் தமிழகத்தில் சுமார் 400 முதல் 500 திரையரங்குகளில் 'பைரவா' படமும் மீதியுள்ள சுமார் 350 திரையரங்குகளில் மற்ற திரைப்படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.