ஜல்லிக்கட்டை காப்பாற்ற கைகோர்ப்போம், ஜெயிப்போம். கீர்த்திசுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, பண்பாடான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராது, கடுங்குளிரில் கடந்த மூன்று நாட்களாக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு நடிகர், நடிகைகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று பிரபல நடிகை நயன்தாரா தனது ஆதரவை போராடும் இளைஞர்களுக்கு தெரிவித்த நிலையில் இன்று இன்னொரு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டு இந்த மஞ்சுவிரட்டு என்ற ஜல்லிக்கட்டு. வாழையடி வாழையாக வரும் நம் தமிழர்களின் பாரம்பரிய மிக்க விளையாட்டு இது. இதை அழியாமல் காப்பாற்றுவது தமிழர்களின் கடமை. இதற்காக போராடும் இளைஞர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்களுடன் போராடும் பெண்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம், செயல்படுவோம், ஜெயிப்போம். இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
#JusticeforJallikattu #ஜெயிப்போம் pic.twitter.com/QAUZhruBCG
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 19, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments