ராதிகா குமாரசாமி - ரமேஷ் அரவிந்த்தின் 'பைரதேவி' டீசர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்து வரும் பைராதேவி என்கிற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

பைராதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலை பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார். டிரைலர் நிஜமாகவே சிலிர்க்க வைக்கும் விதமாக இருப்பதுடன் ராதிகாவும் அகோரா கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார். ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்பது முற்றிலும் உண்மை. சீனியர் நடிகர் ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்

இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி. இயக்குனர் ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடனத்தை மோகன்m கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோர் எழுதியுள்ளனர்

வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைராதேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது

More News

'அஜாக்ரதா'பான் இந்திய படத்தில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான 'அஜாக்ரதா'வில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது

எங்க அம்மா அப்பவே சொன்னாங்க.. மாயாவிடம் புலம்பும் பூர்ணிமா..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஐஷு எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது  எபிசோடு பார்த்த அனைவரும் தெரிந்ததே. 

சூர்யாவின் 'கங்குவா' தீபாவளி போஸ்டர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னை திரும்பிய தளபதி விஜய்.. தாய்லாந்து படப்பிடிப்பில் நடந்தது என்ன?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில ரொமான்ஸ்

பிக்பாஸ் வீட்டில் 2 பிரபலங்கள் திடீர் விசிட்.. வைல்ட்கார்ட் போட்டியாளர்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திடீரென இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.