'பைரவா' கிண்டலுக்கு பதில் கூறிய காஸ்ட்யூம் டிசைனர்
- IndiaGlitz, [Thursday,December 01 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இந்த ஸ்டில்லில் உள்ள விஜய்யின் காஸ்ட்யூம்களை பாராட்டியுள்ள நிலையில் ஒருசிலர் இந்த காஸ்ட்யூம்களை சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்துள்ளனர். இதற்கு இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்காக சாம்பல் கலந்த சிகப்பு நிற சட்டையை ரெடிமேட் ஆக வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி சாம்பல் நிறத்துணியை இணைத்து தைத்தோம். அந்த சட்டையில் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். இது ஒரு புதிய முயற்சி. சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்து சட்டைக்கு மேட்ச் ஆக்கினோம். இந்த காஸ்ட்யூம் மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம். இதுவொரு கடின உழைப்பு ஆகும்.
காஸ்ட்யூம்களை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் படம் வெளிவந்தவுடன் காட்சியுடன் கூடிய காஸ்ட்யூமை பார்த்துவிட்டு அதன்பின்னர் நேர்மறையோ, எதிர்மறையோ உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி அடைவேன்' என்று கூறியுள்ளார்.