டொனால்ட் டிரெம்ப் லைக் செய்த பாகுபலி வீடியோ! உலகம் முழுவதும் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றுக்கு அவர் லைக் செய்து உள்ளார்.
அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டுள்ள டிரம்ப் இந்தியாவில் உள்ள நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று காட்சிகள் உள்ளன. மேலும் அந்த வீடியோவில் டிரம்ப் மனைவி மெலானியா மற்றும் மோடி ஆகியவர்களும் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் லைக் செய்ததால் இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பயங்கரமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments