பிரபுதேவாவுக்கு வில்லனாகும் 'பாகுபலி' பட நடிகர்

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தில் காளகேயா மொழியில் பேசி கொடூரமான வில்லனாக நடித்திருந்தவர் பிரபாகர் என்ற நடிகர். இந்த படத்தில் இவருடைய தோற்றமும் இவர் பேசும் வசனமும் அந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கும்

இந்த நிலையில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாகர் தற்போது பிரபுதேவா நடித்து கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கி வரும் இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பிரபுதேவா முதன்முதலாக காவல்துறை ஆணையர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடனத்தை விட ஆக்சனுக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு வில்லனாக பிரபாகரன் நடிக்கவுள்ளார். ஐந்து சண்டைக்காட்சிகள் உள்ள இந்த படத்தில் பிரபுதேவாவும், பிரபாகரும் மோதும் காட்சிகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணவன் மனைவியாக பிரபுதேவா, நிவேதிதா பெத்துராஜ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.