அஜித் படத்தை அடுத்து போனிகபூரின் அடுத்த தமிழ் ரீமேக் படம்

  • IndiaGlitz, [Tuesday,March 19 2019]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிப்பில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் அஜித் நடிப்பில் 'நேர் கொண்ட பார்வை' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக வித்யாபாலனும், முக்கிய கேரக்டரில் ஷராதா ஸ்ரீநாத் உள்பட பலரும் நடித்து வருகின்றனர். எச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் பிங்க் ரீமேக்கை அடுத்து இன்னொரு சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள போனிகபூர், இந்த படத்தை தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அந்த படம் தான் 'பாதாய் ஹோ'. ஆயுஷ்மான் குரானா, சான்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா உள்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை அமித் ஷர்மா இயக்கியிருந்தார். வெறும் 29 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.221 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் கதை தென்னிந்திய கலாச்சாரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் போனிகபூர் இந்த படத்தின் தென்னிந்திய உரிமையை பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட மொழியின் ரீமேக் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் நட்சத்திரம் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஷில்பா ஷெட்டி விவகாரத்தா? இயக்குனர் பரப்பிய வதந்தியால் பரபரப்பு 

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக பிரபல இயக்குனர் அனுராக் பாசு அனுப்பிய மெசேஜ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது என தெரிந்ததே.

கட்சியில் இருந்து விலகிய குமரவேலுக்கு சரமாரியாக கேள்வி கேட்ட சரளா!

கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் கட்டுக்கோப்பாக சென்று கொண்டிருந்தார்.

எங்களுக்கு கூர்க்கா (செளகிதார்) தேவையில்லை: ஒரு இளைஞரின் ஆவேச பேச்சு!

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் அனைவரும் தங்களை  செளகிதார் என்று அழைத்து வருகின்றனர். செளகிதார் என்றால் பாதுகாப்பவர், பாதுகாவலன் என்ற பொருள்

சென்னையில் நீதிபதி கண்முன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருவதுண்டு. எனவே குடும்ப நல நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்படும்