'வாலு' தடை- சிம்புவுடன் பேசிய தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமான செய்தி… அவர் நடித்த `வாலு` படம் ஜூலை 17 அன்று வெளியாகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். படம் வெளியிடப்படுவதை எதிர்த்து மேலும் ஆறு வழக்குகள் இருப்பதால், வாலு` மீண்டும் ஒரு முறை காலவரையின்றி தள்ளிப்போயிருக்கிறது.
மூன்றாண்டுகளாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் ஜூலை 17 அன்று வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த சிம்புவுக்கு இச்செய்தி நிச்சயம் வருத்தம் தந்திருக்கும். ஆனால அவர் இதனால் நம்பிக்கை இழந்திடவில்லை.
இதைச் சொல்வது திரைத் துறையில் அவரது போட்டியாளராகக் கருதப்படுபவரும் நிஜத்தில் அவரது நண்பருமான நடிகர் தனுஷ்,
`”சிம்புவிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் நம்பிக்கை இழக்கவில்லை. அதோடு ஒட்டுமொத்த விவகாரத்திலும் நேர்மறை அணுகுமுறையுடன் இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பா…. இறையருள் உன் பக்கம் இருக்கட்டும்” என்று ட்வீட் செய்துள்ளார் தனுஷ்,
இதற்கு உடனடியாக பதில் ட்வீட் செய்துள்ள சிம்பு “உங்கள் அன்புக்கு நன்றி, வெளியாகவிருக்கும் தங்கள் படத்துக்கு வாழ்த்துக்கள்., கலக்குங்க” என்றிருக்கிறார்.
தனுஷ், சிம்புவின் இந்த நட்பும் அன்பும் மிகுந்த ட்வீட்களை ட்விட்டரில் இருக்கும் பலர் ரீட்வீட் செய்துவருகிறார்கள்.
தனுஷ் நடித்துள்ள `மாரி` படம் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 17 அன்று வெளியாகவிருக்கிறது.
@dhanushkraja thanks for the love ... All the best for release ... Kalakunga:)
— STR (@iam_str) July 14, 2015
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments