5 வது காதலுக்கு இடையூறு: ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய்!

  • IndiaGlitz, [Friday,March 25 2022]

ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் மூன்றாவது காதலனுக்கு பிறந்த ஒரு வயது குழந்தையை மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய் ஒருவர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, கார்த்திக் என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நான்காவதாக ஒருவரை இன்ஸ்டாகிராமிலும், ஐந்தாவதாக ஒருவரை தனது ஏரியாவில் உள்ளவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் கீதாவின் நடவடிக்கை பிடிக்காததால் மூன்றாவது கணவர் கார்த்திக் தனது மூன்று வயது மகனுடன் தனியே சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தனது ஒரு வயது ஆண் குழந்தை மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கீதா எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறைக்கும் அவர்கள் தகவல் அளித்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது நான்காவது மற்றும் ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது குழந்தைக்கு சோற்றில் மது கலந்து கொடுத்து கொலை செய்து விட்டது தெரிய வந்தது. இந்த கொடூரக்கொலை குறித்த தகவல் பிரேத பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீசார் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆரை இணைத்த ராஜமெளலி, ரஜினி-கமலை இணைப்பாரா? மாஸ் தகவல்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்த சாதனையை ராஜமௌலியை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் மாஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பான் இந்தியா திரைப்படமாகிறது 'பீஸ்ட்': எத்தனை மொழிகளில் ரிலீஸ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

கையில் துப்பாக்கியுடன் கேங்க்ஸ்டராக சரண்யா பொன்வண்ணன்: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் ஒரு படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

'ஹிருதயம்' தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் உள்பட 3 மொழிகளின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .