நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்து வெற்றி பெற்றவுடன் வங்கதேச அணியினர் மைதானத்துக்குள் நுழைந்து தங்களது வெற்றியை கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களிடம் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது
இது குறித்த வீடியோ காட்சிகளை பார்த்த இந்திய அணியின் நிர்வாகிகள் இதுகுறித்து ஐசிடியிடம் புகார் அளித்துள்ளது. ஐசிசி உறுப்பினர்கள் மற்றும் அம்பயர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து வங்கதேச அணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி கூறியபோது ’ வெற்றி உற்சாகத்தில் எங்கள் அணியினர் தவறாக நடந்து கொண்டிருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் கண்டிப்பாக எதிரணியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். எங்கள் அணி வீரர்கள் மைதானத்தில் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் இந்திய அணி நிர்வாகிகள் வங்கதேச அணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
What a ugly immatured fights after U19 worldcup finals by both indian & Bangladesh players????
— MaayoN ????️ᴹᵃˢᵗᵉʳ (@itz_satheesh) February 10, 2020
After all it is a gentlemans game ??#U19CWCFinal #U19WorldCup #INDvBAN #Master pic.twitter.com/YXq8Mz9RZW