இலங்கையில் ஒரு இன்பச்சுற்றுலா.. டூபீஸ் பிகினியில் 'பேச்சிலர்' நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டூபீஸ் பிகினி புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்த திவ்யா பாரதி மீண்டும் ஜீவி பிரகாஷின் 25 வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், ’கிங்ஸ்டன்’ என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் வேறு சில படங்களிலும் நடிக்க திவ்யபாரதி பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மூன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை திவ்யபாரதி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் இலங்கை சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவில் அவர் டூபீஸ் பிகினி உடையில் ஹாட்டாக இருக்கும் காட்சி உள்ளதை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ’இலங்கை தீவில் அருமையான ஒரு சுற்று பயணம்’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.