'ஓர் மாம்பழ சீசனில்'.. 'பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த படம்.. பர்த்டே பேபி தான் ஹீரோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகரின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’ஓர் மாம்பழ சீசனில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘ஓர் மாம்பழ சீசனில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான ‘பேச்சுலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது போலவே ’ஓர் மாம்பழ சீசனில்’ என்ற படமும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாம்பழ சீசனில் 🥭
— Vels Film International (@VelsFilmIntl) July 16, 2024
Extremely elated to join forces with our very own @TheVishnuVishal ⭐️ on this breezy project❤️
A heartfelt film from the director of Bachelor @Sathishdiroff
Advance birthday wishes #VV😉@IshariKGanesh @VVStudioz@B4UMotionPics @ivyofficial2023… pic.twitter.com/PAkWVsgnWn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments