குழந்தை சுர்ஜித்: 66 மணி நேரமாக தொடரும் போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துழை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 64 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. சுர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளை குழாய் அருகில் ஒரு சுரங்கம் தோண்டப்பட்டு அந்த சுரங்கத்திற்கும் ஆழ்துளை கிணறுக்கும் இடையில் ஒரு பாதையை ஏற்படுத்தி அந்த பாதையில் சுர்ஜித்தை பத்திரமாக வெளியே கொண்டு வர திட்டமிடப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலையில் தொடங்கியது
ஆனால் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் கோளாறு, மழை மற்றும் பல்வேறு காரணங்களால் சுரங்கம் தோண்டும் பணி அவ்வப்போது தடைபட்டாலும் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பாறைகள் அதிகம் இருப்பதால் சுரங்கம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்ட போதிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எந்த காரணத்தை முன்னிட்டும் மீட்பு பணிகள் நிறுத்தப்படாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் குழிதோண்டும் எந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டு உள்ளதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இயந்திரத்தின் துளைபோடும் பிரமாண்டமான குழாயில் பழுது ஏற்பட்டதால் அந்த பழுதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் குழந்தை குழிக்குள் விழுந்து 66 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தண்ணீர் உணவு இன்றி இத்தனை மணி நேரம் ஒரு குழந்தையால் தாக்குபிடிக்க முடியுமா என்ற கேள்வியும் பலரது மனதில் எழுந்துள்ளது
இந்த கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் ஒருவர் ’ஒரு வாரம் கூட தண்ணீர் உணவு இல்லாமல் உயிர் மீண்ட குழந்தைகளை நாங்கள் எங்கள் அனுபவத்தில் பார்த்து இருக்கின்றோம். எனவே குழந்தை மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணமாக இருக்கிறது. அதற்காகத்தான் மீட்புக் குழுவினர் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்
மொத்தத்தில் குழந்தை சுஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த பிரார்த்தனை பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments