புயலின் நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் வைத்த பெற்றோர்!

இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்த நிலையில் புயலின்போது பிறந்த குழந்தை ஒன்றுக்கு அக்குழந்தையின் பெற்றோர் ஃபானி என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை 11.03 மணிக்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. புயல் மிக தீவிரமாக கரையை கடந்த நேரத்தில் இந்த குழந்தை பிறந்ததால் அதன் ஞாபகமாக 'ஃபானி' என்றே அந்த குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் பெயர் வைத்தனர். புயலின் நடுவே பிறந்தாலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் கரைகடந்த வர்தா, கஜா புயலின்போது அந்த புயலின் பெயர்களை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.