close
Choose your channels

த்ரிஷாவுடன் நடிக்கும் நயன்தாரா மகள்

Friday, December 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி என்ற குழந்தை நட்சத்திரம் துருதுருவென நடித்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

இந்த நிலையில் மானஸ்வி தற்போது த்ரிஷா நடித்து வரும் 'பரமபத விளையாட்டு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, மானஸ்வி நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டது. குழந்தை நட்சத்திரம் மானஸ்வி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'பரமபத விளையாட்டு' படத்தை அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கி வருகிறார். 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment