பெற்றோர்களே உஷார்… குளிப்பதை வீடியோவாக ஒளிப்பரப்பிய சம்பவம்!
- IndiaGlitz, [Monday,October 11 2021]
குழந்தைகள் இருக்கும் வீடுகளைக் கவனித்தால் தெரியும். இன்றைய தலைமுறை குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளைவிட செல்போனையே அதிகம் விரும்புகின்றனர். இப்படி கைகளில் செல்போனை வைத்துக் கொண்டு அந்தக் குழந்தையால் சும்மா இருக்க முடியுமா? இருக்கிற எல்லா ஆப்களையும் ஓபன் செய்து இஷ்டத்துக்கு நொண்டி வைத்துவிடும். நில நேரங்களில் லைவ் வீடியோவையும் ஒளிப்பரப்பி விடும். இப்படியொரு சம்பவம்தான் தற்போது அரங்கேறியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் பிரியண்ணா என்பவர் தன்னுடைய சிறிய வயது குழந்தையிடம் செல்போனை கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். அவர் கல்வி தொடர்பான ஆப்பை தனது செல்போனில் டவுன்லோடு செய்திருந்ததால் அதில் வீடியோவை ஆன் செய்துகொடுத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தை திடீரென ஸ்கீரினில் கையை வைத்திருக்கிறது.
இதனால் வீடியோ நின்றுபோக உடனே நமது ஆராய்ச்சியாளர் (குழந்தை) இஷ்டத்து செல்போனை நொண்டி இருக்கிறது. ஆனாலும் வீடியோ வரவில்லை. இதனால் அம்மாவை தேடியிருக்கிறார். குளித்துக் கொண்டிருந்த தாயும் குழந்தைதானே என குளியல் அறைக்குள் அழைத்து மீண்டும் வீடியோவை ஆன் செய்துகொடுத்துள்ளார். ஆனால் இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை அந்த குழந்தை ஆன் செய்திருக்கிறது.
இதனால் பேக் கேமரா வழியாக குளியல் அறையில் நின்றிருந்த அம்மாவிடன் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைவ்வாக ஓடியிருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன பிரியண்ணா உடனே வீடியோவை நிறுத்திவிட்டு தனக்கு நேர்ந்த அவலத்தை டிக்டாக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தை பிரியண்ணா பகிர்ந்து கொண்டதையடுத்து சில பெற்றோர்களும் தங்களுக்கு நேர்ந்த அவலக் கதையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இப்படி அறியாமையினால் நடக்கும் விஷயங்களுக்கு மாற்றாக செல்போனில் குழந்தைகளுக்கான மோடை ஆன் செய்து கொடுக்குமாறு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இப்படி குழந்தைகளுக்கான மோட் ஆன் செய்யப்படும்போது குழந்தைகள் தேவையற்ற வெப் சைட்டுகளை திறக்கமாட்டார்கள். அதேபோல சில சமயங்களில் பெற்றோர்களின் ரகசியமும் காக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.