பிறந்த குழந்தைக்கு 27 வயதா??? சாதனை சம்பவத்தால் உறைந்து போன பெற்றோர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் டெல்லிஸி மாகாணத்தில் 27 வருடங்களாக உறை பனியில் சேகரித்து வைக்கப்பட்ட கரு முட்டையில் இருந்து ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது. உலகில் இத்தனை பெரிய சாதனையானது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக குழந்தை இல்லாத பெற்றோர்கள் கருமுட்டையை கடனாகப் பெற்று குழந்தையைப் பெற்றுக் கொள்வது மருத்துவத் துறையில் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது.
இந்நிலையில் 27 வருடங்களுக்கு முன்பு தானமாகப் பெறப்பட்ட கருமுட்டையில் இருந்து ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்றுக்கொண்ட சம்பவம் கடும் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 27 வருடங்களுக்கு முன்பு உறைபனியில் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டையை டெல்லிஸி மாகாணத்தில் உள்ள டின்- பென் கிப்சன் எனும் தம்பதியினர் தானமாகப் பெற்றுக் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழந்தைக்கு மோலி கிப்சன் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அந்தத் தம்பதியினர் மோலி எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் மோலியின் அக்கா எம்மா கிப்சனும் 24 வருடமாக உறைபனியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கருமுட்டையில் இருந்த வந்தவள் தான் என்பதையும் அந்தத் தம்பதியினர் தெரிவித்து உள்ளனர். இதனால் ஒரே வீட்டில் உலகத்தின் 2 பெரிய சாதனை சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக மலட்டுத் தன்மையில் சிக்கி தவித்த இந்தத் தம்பதியினர் 2 பெரிய சாதனை குழந்தைகளுடன் தற்போது உலா வருவது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout