போதையில் தாய்ப்பால் கொடுத்ததால் இறந்த குழந்தை: நீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்பு
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
பீர் குடித்துவிட்டு போதையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்த வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற பெண், மேல் முறையீட்டு மனு செய்திருந்த நிலையில் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு மூரியல் மாரீசன் என்ற பெண் பீர் குடித்துவிட்டு போதையுடன் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் குழந்தையும் தூங்கிவிட்டது, அவரும் தூங்கிவிட்டார்
காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தது. அதுமட்டுமின்றி குழந்தையின் உதடு நீல நிறம் மாறியதால் விஷம் காரணமாக அந்த குழந்தை இறந்ததாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் பதிவு செய்த வழக்கில் தாயின் அஜாக்கிரதையாலும், போதையில் தாய்ப்பால் கொடுத்ததாலும் தான் குழந்தை இறந்து விட்டது என்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மூரியல் மாரீசனுக்கு இருபது வருட சிறைத்தண்டனை கிடைத்தது
இந்த தண்டனையை எதிர்த்து மூரியல் மேல் முறையீட்டு மனு செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் மூரியல் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் குழந்தை இறந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் அவர் திட்டம் போட்டு குழந்தையை கொல்லவில்லை. அதுவுமில்லாமல் பீர் குடித்துவிட்டு தூங்கியது ஒரு பெரிய குற்றமல்ல’ என்று கூறி அவரை நீதிபதி விடுதலை செய்தார். இந்த வினோதமான தீர்ப்பு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது