'பேபி கம் டவுன் கம் டவுன்' .. கர்ப்பிணி வயிற்றுடன் செம்ம டான்ஸ் ஆடும் அமலபாலா..!

  • IndiaGlitz, [Saturday,June 08 2024]

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தனது கர்ப்பிணி வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் கடந்த ஆண்டு இவர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார் என்பதும் தெரிந்தது.

கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்து அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த நேரத்தில் கூட அவர் கர்ப்பிணி வயிற்றை கையில் பிடித்துக் கொண்டு செம டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவின் பின்னணியில் ’பேபி கம் டவுன் கம் டவுன்’ என்ற பாடல் ஒலிக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது