close
Choose your channels

விஷ்ணு-ரஜினிக்கு கிடைத்த புதிய புரமோஷன்

Tuesday, January 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை நல்ல தரமான படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதி புரமோஷன் பெற்றுள்ளனர்.

ஆம், நேற்று விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. விஷ்ணு குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.எங்களுடைய வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோஷத்தை கொடுத்த இந்த தருணத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்று விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு கார்த்தி, மஞ்சிமாமோகன்,வருண்மணியன், ஹரீஷ் உத்தமன், கருணாகரன், சாந்தனு, உள்பட பலர் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 'இடம் பொருள் ஏவல்' படத்தில் நடித்து முடித்துவிட்ட விஷ்ணுவிஷால் தற்போது 'முருகானந்தம் இயக்கத்தில் 'கதாநாயகன்' என்ற படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் 'சிண்ட்ரெல்லா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment