உடலில் தோல் இன்றி பிறந்த குழந்தை!
- IndiaGlitz, [Monday,April 22 2019]
மரபணு குறைபாடு காரணமாக, பிரிசில்லா என்கிற 25 வயது பெண்ணுக்கு உடலில் தோல் இன்றி பிறந்துள்ளது குழந்தை. இக்குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.
ஜனவரி 1 ம் தேதி சான் அன்டோனியோவில், தனியார் மருத்துவமனையில்பிரிசில்லா என்கிற பெண், 3 பவுண்ட் எடையும் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இந்த குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம், இக்குழந்தையின் பெரும்பகுதி, குறிப்பாக குழந்தையின், தலை மற்றும் அவரது கால் பகுதிகள் தவிர, தோல்கள் இல்லை. கண் இமைகளும் மூடியே உள்ளது. மேலும் இதனால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது என, குழந்தையின் உடல் முழுவதும், பாதுகாப்பு உடையைப் சுற்றி, தீவிர கண்காணிப்பிப்பில் வைத்துள்ளனர்.
அறிய மரபணு குறைப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இக்குழந்தையின் பெற்றோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், குழந்தையின் சிகிச்சைக்கு பலர் உதவி செய்து வருகிறார்கள்.