வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!
- IndiaGlitz, [Monday,November 08 2021]
பிரேசில் நாட்டில் பெண்மணி ஒருவருக்கு வாலுடன் குழந்தை பிறந்துள்ளது. இதைப்பார்த்த விஞ்ஞானிகள் அக்குழந்தையின் மூளை நரம்பிற்கும் வாலுக்கும் தொடர்புள்ளதா எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் ஃபோர்டலசா நகரத்தில் உள்ள ஆல்பட்சான் மருத்துவமனையில் பெண்மணி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. உரிய வளர்ச்சியுடன் சுயபிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு வால் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 12 செ.மீ நீளமுள்ள அந்த வாலின் இறுதியில் 4 செ.மீ விட்டத்துடன் பந்துபோல ஒரு பொருள் இருந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் நரம்பு மண்டலப்பகுதிக்கும் வாலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். அதில் மூளை இயக்கத்திற்கும் வாலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்ததும் அந்த வாலை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். இந்தத் தகவலை அடுத்து பிரேசில் நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ உலகில் வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.